முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்-களில் கொள்ளை: குற்றவாளிகளை நெருங்கும் தனிப்படை போலீசார்

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்-களில் கொள்ளை: குற்றவாளிகளை நெருங்கும் தனிப்படை போலீசார்

கொள்ளை போன ஏடிஎம்

கொள்ளை போன ஏடிஎம்

Thiruvannamalai ATM Theft | கொள்ளையர்களை போலீசார் நெருங்கிவிட்டதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏடிஎம்-களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை தொடர்பாக, கர்நாடகாவின் கோலார் தங்க வயல் பகுதியில் கொள்ளையர்களை தங்கவைத்த நபரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில் புகுந்த கொள்ளையர்கள், 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் சிக்கிய நிலையில், கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பு, கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களை நோட்டமிட்ட காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்தன.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்ததோடு, ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்த கும்பலே, இந்த கொள்ளையை நிகழ்த்தியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்தக் கும்பல், ஆந்திரப்பிரதேசம் வழியாக கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் பகுதிக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார், கேஜிஎஃப் பகுதியில் குற்றவாளிகளை தங்கவைத்த நபரை கைதுசெய்துள்ளனர். மேலும், ஏடிஎம் கொள்ளையர்களை நெருங்கி விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளதால், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Crime News, Local News, Thiruvannamalai