முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் திடீர் ட்விஸ்ட்... மெக்கானிக்குகள் கைவரிசை?

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் திடீர் ட்விஸ்ட்... மெக்கானிக்குகள் கைவரிசை?

ஏடிஎம் கொள்ளை சம்பவம்

ஏடிஎம் கொள்ளை சம்பவம்

Crime News : திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மெக்கானிக்குகள் கைவரிசை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் 3 ஏடிஎம் மையம் மற்றும் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. ஏடிஎம் மையத்தின் ஷட்டரை மூடிவிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர்.

இதில், திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.19,50,000 கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல், திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.32,00,000 கொள்ளை போனது. மேலும், திருவண்ணாமலை நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தொலைவில் கலசபாக்கத்தில் உள்ள ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ.3,00,000  திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் போளூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 கொள்ளைபோனது.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து மொத்தம் 72,50,000 ஆயிரம் ரூபாய்  கொள்ளையடிக்கப்பட்டது.  பணத்தை கொள்ளையடித்த பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எரித்ததுடன், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் கொள்ளையர்கள் எரிந்ததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு சவால் ஏற்பட்டது.

இதையடுத்து, ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் 6 தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. மேலும் வேலூர் வழியாக, ஆந்திர பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஏடிஎம் இயந்திரங்களை சீரமைக்கும் மெக்கானிக்குகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்பதால் ஏடிஎம்மில் அலாரம் அடிக்கவிடாமல் செய்து நூதன முறையில் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது. இதனால் இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

First published:

Tags: Crime News, Local News, Tiruvannamalai