முகப்பு /செய்தி /Tiruvannamalai / மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.. ஆரணி ஓட்டலில் சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி

மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.. ஆரணி ஓட்டலில் சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி

பிரியாணியில் கரப்பான் பூச்சி

பிரியாணியில் கரப்பான் பூச்சி

ஆரணியில் உள்ள அசைவ ஓட்டலில் சாப்பிட்டபோது, பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், இது தொடர்பாக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் 5ஸ்டார் என்ற அசைவ ஓட்டல் இயங்கி வருகின்றது

இந்த ஓட்டலில் நேற்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி, அவரது மனைவி மட்டன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.  மட்டன் பிரியாணி சாப்பிட்ட போது பேரதிர்ச்சியாக சாப்பிட்ட பிரியாணியில்  கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் கடையின் ஊழியரிடம் மூர்த்தி தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் படிக்க: ஆபாச வீடியோ சாட்டிங்.. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கரூரில் கைது

ஏற்கனவே சிக்கன் பிரியாணி சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவன், சிறுமி ஆகிய 2 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தேறியுள்ளன.

இந்நிலையில், பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அசைவ பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: மோகன்ராஜ் - ஆரணி

First published:

Tags: Arani, Briyani, Thiruvannamalai