ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கிரிவலம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கிரிவலம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபத்தன்று மலையேறுவதற்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

  • Local18
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப வலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், எவ்வித சிரமமும் இன்றி பக்தர்கள் கிரிவலம் வரவும் திருக்கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் விரிவாக விவரிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலை துறை, நகராட்சி துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Also see... திருக்கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை!

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் முருகேஷ்,” 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் பாதையில் இந்த ஆண்டு கூடுதலாக பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்னதானத்திற்காக நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 101 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களில் 226 பேர் அன்னதானம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் அன்னதானம் செய்பவர்கள் அவர்களே தங்கள் குப்பைகளை எடுக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும்,” கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக 2300 சிறப்பு பேருந்துகளும், டிசம்பர் 5,6,7, 8 ஆகிய தேதிகளில் 20 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 54 தற்காலிக கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வருகின்ற தீப தினமான டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது” என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு மலையேற 2500 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கியூ ஆர் கோட் வசதியுடன் கூடிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பெற்ற பின்பு மலை ஏறுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஏற வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டு பரணி தீபத்திற்கு 4000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மகா தீபத்திற்கு திருக்கோவிலுக்குள் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

Also see... திருவண்ணாமலை தீபத்திருவிழா... 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை

மேலும், பரணி தீபத்திற்காக ஆன்லைன் மூலம் 500 டிக்கெட்டுகளும் மகாதீபத்திற்காக 1200 டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறியவர் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ராஜகோபுரம், கோவிலில் உள்ள பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட அவர் ராஜகோபுரம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் முன்பதிவு செய்துள்ள நபர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் குறிப்புகள் ஏதும் பெறாமல் இருந்ததை கண்டு மேலாளரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள சொன்னதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Also see... திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 30 லட்சம் பக்தர்கள்.. 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

தொடர்ந்து கோவிலின் உள்பிரகாரத்தில் ஆய்வு மேற்கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், டிசம்பர் 3-ம் தேதி மாட வீதியில் வலம் வர உள்ள மகாராஜா தினத்தன்று 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் டிசம்பர் 6ஆம் தேதி தீப தினத்தன்று தமிழகம் முழுவதிலிருந்து 11000 த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.

மேலும், திருவண்ணாமலை நகரத்திற்குள் உள்ளே வர ஒன்பது சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்காக அந்த இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக  கூறினார்.

திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தரஉள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்தந்த மாவட்டங்களுக்கு 20,000 ரெஸ்ட் பேண்ட் (Wrist Band) கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகள் அவர்கள் கையில் ரெஸ்ட் பேண்டை கட்டிக்கொண்டு மாவட்டத்திற்குள் வந்தால் எளிதில் தொலைந்து போனால் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் இது போன்ற வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Also see... கார்த்திகை தீபம்.. 6 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் - ஆட்சியர் உத்தரவு

அதனைத் தொடர்ந்து பேசியவர், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், மாடவீதி, நகரப்பகுதி புறவழிச்சாலை மாவட்ட எல்லை என அனைத்து பகுதிகளிலும்  5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் இதில் 15 குழுவினர் வாகன தணிக்கை பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் பயணிகளின் உடைமைகளை சரி செய்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் கூறினார்.

வெளி மாவட்டத்தில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தருபவர்களை தீவிரமாக கண்காணிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அத்துடன் திருவண்ணாமலை நகரத்திற்குள் ஆன்லைன் மூலம் 12000 கார் பார்க்கிங் செய்ய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிசம்பர் 6ஆம் தேதி பரணி தீபம் முடிந்த பிறகு காலை 7 மணி முதல் 10 மணி வரை தேவைக்கு ஏற்ப பொது தரிசனத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai