ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழா: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்!

அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழா: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்!

திருவண்னாமலை அன்னதானம் ஆலோசனைக் கூட்டம்

திருவண்னாமலை அன்னதானம் ஆலோசனைக் கூட்டம்

Thirukarthigai Deepam Festival 2022 | திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் செய்ய விண்ணப்பிக்க நவம்பர் 26 ஆம் தேதி கடைசி நாள் என்று திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் அன்னதானம் விநியோகம் செய்ய விரும்புவோர் இன்று முதல் நவம்பர் 26 ஆம் தேதிக்குள்ளாக foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உணவு கட்டுப்பாடு துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 26 ஆம் தேதிக்கு பிறகு அன்னதானம் செய்ய விரும்புவோருக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். நேரில் விண்ணப்பிக்க நியமன அலுவலர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை செங்கம் ரோடு, திருவண்ணாமலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் மகா தீபத்தன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. சபரிமலை தரிசன நேரத்தில் மாற்றம்

அனுமதி பெறாமல் அன்னதானம் செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai