Home /News /tiruvannamalai /

ஆரணியில் மனைவியின் சமாதி அருகே தனக்கு தானே குழி தோண்டி வைத்த கணவர்... தந்தையின் ஆசையை நிறைவேற்றிய பாசக்கார மகன்...

ஆரணியில் மனைவியின் சமாதி அருகே தனக்கு தானே குழி தோண்டி வைத்த கணவர்... தந்தையின் ஆசையை நிறைவேற்றிய பாசக்கார மகன்...

25ஆண்டுகளாக  தோண்டி வைத்திருந்த குழி | மகன் எம்.சி.குப்பன்

25ஆண்டுகளாக தோண்டி வைத்திருந்த குழி | மகன் எம்.சி.குப்பன்

Arani | ஆரணியில் மனைவியை புதைத்த இடத்திலேயே தனக்கு குழி தோண்டி 25 ஆண்டுகளாக பராமரித்த முன்னாள் ராணுவ வீரர் |

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Arani (Arni), India
    இறந்துபோன மனைவியின் சமாதி அருகே தன்னை புதைக்க வேண்டும் என்பதற்காக குழி தோண்டி கணவர் ஒருவர் காத்திருந்துள்ளார். அவர் இறந்த பின்னர், தந்தையின் ஆசைப்படி தங்கள் தாயின் சமாதி அருகேயே தந்தையையும் புதைத்துள்ளார்  ஆரணியை சேர்ந்த பாசக்கார மகன். 

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சின்னபையன். இவரது மகன் எம்.சி.குப்பன்(98) இவரும் முன்னாள் ராணுவ வீரர். கடந்த 1942ம் ஆண்டு நடைபெற்ற 2ம் உலக போரில் பங்கேற்றவர்.

    இவருக்கு சாராதம்மாள் என்ற மனைவியும் பிரபாகரன் என்ற மகன் நிர்மலா, மாலா ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்  ராணுவத்தில் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றுள்ளார். இவரது மகன் பிரபாகரனும் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரனுக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும் பிரபுகுமார் என்ற மகனும் ஜெயபிரியா, இந்து என்ற 2 மகளும் உள்ளனர்.

    மேலும் கடந்த 10.07.1998ம் ஆண்டு  குப்பன் மனைவி சாரதாம்மாள் நோய்வாய்பட்டு இறந்து விட்டார். இறந்த பின்னர் தன்னுடைய மனைவிக்காக வண்ணாங்குளம் சுடுகாடு பகுதியில் 52 செண்ட் நிலத்தை சொந்தமாக வாங்கி அந்த இடத்தில் தன்னுடைய மனைவியை அடக்கம் செய்தார்.  மேலும், மனைவி சமாதி உள்ள இடத்தின் அருகிலேயே தன்னையும் புதைக்க வேண்டும் என குழி தோண்டி  இறந்தால் அதே இடத்தில் புதைக்க வேண்டி குழி தோண்டியுள்ளார். கடந்த 25ஆண்டுகளாக தான் தோண்டி வைத்திருந்த குழியை பராமரித்தும் வந்துள்ளார்.
    இந்நிலையில் கடந்த 18ம் தேதி வயது முதிர்வு காரணமாக  குப்பன் இறந்து விட்டார்.

    Also see... மதுரையில் வீர மங்கை வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்.. பார்வையாளர்களை கவர்ந்தது 

    தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக தாயின் சமாதி அருகே தந்தை தோண்டி வைத்திருந்த குழியிலேயே அவரை மகன் பிரபாகரன் நல்லடக்கம் செய்தார்.  இதனை கண்ட ஊர் கிராம பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

    செய்தியாளர்: மோகன்ராஜ், ஆரணி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arani, Army man, Husband Wife

    அடுத்த செய்தி