Home /News /tiruvannamalai /

ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் பேருந்தை இயக்கிய நடத்துநர்... பீதியில் அலறியடித்து இறங்கிய பயணிகள்

ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் பேருந்தை இயக்கிய நடத்துநர்... பீதியில் அலறியடித்து இறங்கிய பயணிகள்

மதுபோதையில் இருந்த ஓட்டுநர்

மதுபோதையில் இருந்த ஓட்டுநர்

Tiruvannamalai district News: அரசு பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் நடத்துனர் பேருந்தை இயக்கி வந்ததால் பயத்தில் பேருந்தை நிறுத்தி இறங்கிய பயணிகளால் வந்தவாசி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மது போதையில் இருந்த ஓட்டுநரால் பேருந்தை ஓட்ட முடியாத நிலையில், நடத்துநர் பேருந்தை இயக்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு (தடம் எண் 212) அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. அதன்டி காஞ்சிபுரம் வந்த பேருந்தை ஓட்டுநர் தரணியேந்திரன் ஓட்டி வந்தார். பின்னர் 46 பயணிகளுடன் புறப்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி வருவதற்குள் பேருந்து பல்வேறு இடங்களில் தடுமாற்றமாக இயக்கபட்டதால் சந்தேகம் அடைந்த பயணிகள் பேருந்தை இயக்கிய ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதுதான், பேருந்தை ஓட்டி வந்தது ஓட்டுநர் அல்ல நடத்துனர் என தெரியவந்தது.

    பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர்  மதுபோதையில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து கொண்டு வருவதை பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வந்தவாசி நகர பகுதிக்குள் பேருந்து வந்த உடன் பேருந்தை நிறுத்த கோரி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,  நடத்துநர் பேருந்தை வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நிறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பேருந்து அங்கே நின்றவுடன், பயணிகள் இருக்கையில் அமர்ந்து வந்த ஓட்டுநர் மாயமானார். இதனால் கூச்சல் குழப்பம் அதிகமானது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி போலீசார், பேருந்தில் வந்திருந்த பயணிகளிடம் சமாதானம் செய்து வேறு மாற்று அரசு பேருந்தில் அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.  இதனால், பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி சென்றனர்.

    Must Read : ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்... செயின் திருடனாக மாறிய பொறியியல் பட்டதாரி

    அதனைத் தொடர்ந்து, பேருந்து நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து ஓட்டுநர் குடித்து விட்டு பேருந்தை  இயக்க முடியாத சூழலில் நடத்துநர் பேருந்தை இயக்கியதால், விபத்து ஏற்படுத்தும் சூழல் இருந்த நிலையில், பேருந்தில் பயணித்த பயணிகள், பயந்து அலறி பேருந்தை நிறுத்தி இறங்கிய சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    செய்தியாளர் - மோகன்ராஜ்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Arani, Drunk, Govt Bus, Passengers, Tiruvanamalai

    அடுத்த செய்தி