Home /News /tiruvannamalai /

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. கருகலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழப்பு

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. கருகலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

திருவண்ணாமலை செங்கம் அருகே  பத்தாம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை அவரது உறவினரான சேட்டு என்பவரின் மகன் முருகன் தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்றதாகவும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் இதனால் மாணவி நான்கு மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனை அறிந்த முருகன் தனது உறவினர் பிரபு என்பவரின் உதவியோடு கருக்கலைப்பு மாத்திரை வாங்கிக் கொண்டு நேற்று மாணவியை அழைத்துச் சென்று கருக்கலைப்பு மாத்திரை கொடுத்துள்ளனர். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட மாணவியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வரும் வழியில் மாணவி திடீரென மயங்கியுள்ளார்.  உடனடியாக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது

மேலும் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் வெங்கட்ராமன் தானிப்பாடி காவல் நிலையத்தில் தனது மகளை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கொன்று விட்டதாகவும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எனது மகளின் உடலை பெற்று தரக் கோரியும் புகார் மனு அளித்துள்ளார்

இதனை  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தானிப்பாடி போலீசார் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான முருகன் என்ற இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த பிரபு என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்புக்கு முயன்று மாணவி உயிரிழந்த சம்பவம் பகுதியில் வரும் சாேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Crime News, Tiruvanamalai

அடுத்த செய்தி