ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... 60 வயது ஆய்வக அலுவலர் கைது... ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... 60 வயது ஆய்வக அலுவலர் கைது... ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்

கைதான ஆசிரியர்

கைதான ஆசிரியர்

Tiruvannamalai News : கோவிந்தசாமி பள்ளியில் உள்ள நூலகத்தில் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு கடந்த சில தினங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  ஆரணி அருகே பள்ளி மாணவிகளுக்கு 60 வயது ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் சுமார் 750 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

  இதில் பள்ளி தலைமையாசிரியை நந்தினிஉட்பட சுமார் 30 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பள்ளி ஆய்வக அலுவலராக சோமதாங்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி(60) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

  இந்நிலையில், கோவிந்தசாமி பள்ளியில் உள்ள நூலகத்தில் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு கடந்த சில தினங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க : கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் முழுவீச்சில் முன்னேற்பாடு பணிகள்

  இதனால் இன்று பள்ளியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் மற்றும் மாவட்ட கல்விநிர்வாகம் வருவாய் துறை ஆகியோர் நேரில் வந்து 8ம் வகுப்பு மாணவிகளிடம் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

  பின்னர் பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய ஆய்வக அலுவலர் கோவிந்தசாமி(60) போலீசார் கைது செய்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் குன்னத்துர் அரசு பள்ளி நிர்வாகம் மெத்தன போக்கால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும், பள்ளி தலைமையாசிரியை இடமாறுதல் செய்யக்கோரி  மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  8ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஆரணி செய்தியாளர் - மோகன்ராஜ்

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Tiruvannamalai