Home /News /tiruvannamalai /

கோவில், பள்ளிக்கூடம் அருகே டாஸ்மாக் கடைகள்.. அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கோவில், பள்ளிக்கூடம் அருகே டாஸ்மாக் கடைகள்.. அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் போராட்டம்

கோவிலின் அருகே உள்ள டாஸ்மாக்கை அகற்றக் கோரி பலமுறை புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்ல என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai | Tamil Nadu
    ஆரணி அருகே மூனுகபட்டு பழமைவாய்ந்த ஆலயம் அருகாமையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 100க்கும் மேற்பட்ட மேல்சீசமங்கலம் கிராம பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் ஊராட்சிக்கு பட்ட பகுதி தீபாநகர். இந்த பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதிக்கு அருகாமையில் மூனுகபட்டு பழமை வாய்ந்த ஆலயமாக பச்சையம்மன் ஆலயம் மற்றும் அரசு பள்ளி உள்ளன. கோவில் மற்றும் பள்ளிஅருகாமையில் அரசு மதுபான கடை இயங்கி வருகின்றன.

    இது மட்டுமின்றி குடிமகன்களின் அட்டகாசம் நாளடைவில் அதிகமாகி வருவதால் இந்த சாலையை கடக்கும் பொதுமக்கள் முகம் சுளித்து சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.



    மேலும் தீபா நகரில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மேல்சீசமங்கலம் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆரணி வாழபந்தல் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த ஆரணி தாலுக்கா போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல்போராட்டத்தால் 1மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

    செய்தியாளர் ம.மோகன்ராஜ்  (ஆரணி)
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tasmac, Tiruvannamalai

    அடுத்த செய்தி