திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சைவ உணவகத்தில் நேற்று முன்தினம் மதியம் பிசியோதெரபி மருத்துவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது உணவு சாப்பிடுவதற்கு முன்பு சர்வர் ஸ்வீட்கான் வெஜ் சூப் கொடுத்துள்ளார். அதனை மருத்துவர் ஸ்பூன் மூலம் கிளறிய பொழுது சூப்பில் இருந்து ஈ ஒன்று வெளியே மிதந்து வந்துள்ளது,
அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ஹோட்டல் ஊழியரை அழைத்து கேட்ட பொழுது அலட்சியமாக ஈ - யை எடுத்து கீழே போட்டுவிட்டு குடியுங்கள் என்று பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த மருத்துவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.பின்னர் அதனை செல்போன் மூலம் வீடியோ எடுத்து விட்டு அதற்குண்டான பில் தொகையையும் வழங்கியுள்ளார். பின்னர் நாளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அசைவ உணவகத்தில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் கடந்த வாரம் ஆரணியில் உள்ள உணவகத்தில் பார்சல் சாப்பாடு வாங்கி எடுத்துச் சென்று பிரித்து பார்க்கும் பொழுது பீட்ரூட் பொரியலில் எலித்தலை இருந்து மிகபெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் பிரபல உயர்தர சைவ உணவகத்தில் சூப் இல் ஈ இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரபல சைவ உணவகமாக திகழ்ந்து வருகிறது.
Also see... பரந்தூர் விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு..!
அதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் இந்த சைவ உணவகத்தில் காலை மாலை இரவு என 3 வேளைகளிலும் தினம்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் உணவகத்தில் அமர்ந்தும் பார்சல் மூலம் வாங்கி சென்றும் சாப்பிட்டு வருகின்றனர். அதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர் செய்து பார்சல் வாங்கி சென்றும் சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் மதிய உணவு சாப்பிட வந்த போது சூப்பில் ஈ இருந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Adayar, Crime News, Doctor, Food, Hotel, Thiruvannamalai