Home /News /tiruvannamalai /

யு.கே.ஜி. மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் - ஊழியர்களிடம் தீவிர விசாரணை

யு.கே.ஜி. மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் - ஊழியர்களிடம் தீவிர விசாரணை

 காவல் கண்காணிப்பாளர்

காவல் கண்காணிப்பாளர்

திருவண்ணாமலை தனியார் பள்ளியில் வேறு ஏதாவது மாணவ மாணவிகளுக்கு இது போன்று பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகள் நடந்திருந்தால் புகார் அளிக்கலாம் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தனியார் பள்ளியில் யுகேஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த நான்கரை வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். சிறுமிக்கு அப்பள்ளியின் தாளாளரின் கணவரான அரசுப்பள்ளி ஆசிரியர் காமராஜ் சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, பாலியல் தொந்தரவு குறித்து தெரியவந்ததை அடுத்து மாணவியின் பெற்றோர் போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட பள்ளியை  பார்வையிட்டு சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை பறிமுதல் செய்தார். மேலும் அப்பள்ளியில் பணியாற்றும்  ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார்.

    இந்த விசாரணை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைப்பெற்றது. குறிப்பாக யுகேஜி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் புத்தகங்கள் அடிக்கி வைக்கப்பட்டுள்ள அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரித்தனர். மாணவியின் வகுப்பு ஆசிரியர் இடத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    படம் : விசாரணையில் காவல் துறையினர்


    அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் , தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்டது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அடுத்த அரைமணி நேரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் அவர்களுடைய தொலைபேசி சிக்னலை வைத்து தனியார் பள்ளியின் தாளாளரின் கணவர் காமராஜை எட்டியாபுரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தனியார் பள்ளியின் தாளாளர் பிரபாவதியையும் கைது செய்துள்ளோம் என்றார். 2 நபர்களும் தற்போது திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police)


    மேலும் பள்ளியில் உள்ள சிசிடிவி ,ஹாடிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தனியார் பள்ளி காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம். வன்கொடுமைக்கு உள்ளான மாணவியின் வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றோம். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு பள்ளியின்  வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் கைரேகைகளையும் சேகரிக்க பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் பள்ளியில் வேறு ஏதாவது மாணவ மாணவிகளுக்கு இது போன்று பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகள் நடந்துள்ளதா என்பது குறித்து மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவ்வாறு புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்களை ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    செய்தியாளர் : சதீஷ் அண்ணாமலை
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Sexual abuse, Thiruvannamalai

    அடுத்த செய்தி