ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருவண்ணாமலையில் சாமி சிலையின் முகத்தை சேதப்படுத்தி சிசிடிவி கேமரா பொருத்தம்... சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்...

திருவண்ணாமலையில் சாமி சிலையின் முகத்தை சேதப்படுத்தி சிசிடிவி கேமரா பொருத்தம்... சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்...

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோவிலில் கோபுரத்தில் உள்ள துவர பாலகர் சிலையின் முகத்தை சேதப்படுத்தி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்...

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பக்தர்களை கண்காணிப்பதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் கோவில் முழுதும் பொருத்தப்பட்டு வருகிறது. அண்ணாமலையார் கோவிலில் திருமஞ்சன கோபுரத்திற்கு அடுத்து உள்ள தெற்கு கட்டை கோபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான துவார பாலகர்கள் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த துவார பாலகர் சிலையின் முகத்தில் ஒப்பந்ததாரர்கள் சிலையின் முகத்தை சேதப்படுத்தி சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.

இதனை புகைப்படம் எடுத்த பக்தர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆனதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் துவார பாலகர் சிலை சேதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அகற்றிவிட்டு சிலையினை சிமெண்ட் பூசி மறு சீரமைப்பு செய்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இதுபோன்று பழமை வாய்ந்த சிலையை சேதப்படுத்தி சிசிடிவி கேமரா பொருத்திய ஒப்பந்ததாரர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆன்மீக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see... வங்கி கணக்கில் பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அக்கவுண்ட் ஓபன்

இந்நிலையில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் துவார பாலகர் சிலையை சேதப்படுத்திய ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

First published:

Tags: CCTV, Statue, Thiruvannamalai