Home /News /tiruvannamalai /

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி

கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி

உங்களுடைய பணம் கீழே விழுந்து விட்டது என கூறி அவரை திசை திருப்பி விட்டு இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai | Tamil Nadu
திருவண்ணாமலையில், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரை திசை திருப்பி விட்டு, அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக் சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை வேலூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (60) ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் ஆவார்.  இவர் நேற்று பிற்பகல் தனது சொந்த செலவிற்காக வேலூர் மெயின் ரோட்டில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியிலிருந்து 2 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு வங்கியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்திற்குள் வைத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மர்மநபர் ஒருவர் உங்களுடைய பணம் கீழே விழுந்து விட்டது என கூறி அவரை திசை திருப்பி விட்டு இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

ALSO READ : ’நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும்...’  மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!

இதனால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Published by:Anupriyam K
First published:

Tags: CCTV, Crime News, Robbery, Theft, Tiruvanamalai

அடுத்த செய்தி