சதுரங்க வேட்டை பட பாணியில் ஆரணி அருகே டெபாசிட் செய்த பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆரம்பிக்கபட்ட நிறுவனத்தில் 3 நாட்களில் 127 பேர் பணத்தை டெப்பாசிட் செய்துள்ளதாக வருவாய் துறை ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள தனியார் லாட்ஜ் வளாகத்தில் புதியதாக ஆரூத்ரா கோல்டு கம்பெனி கடந்த 6ம் தேதி எந்த ஒரு விளம்பரமின்றி திறக்கபட்டன. மேலும் ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்கள் டெபாசிட் தொகை வசூலிக்க கூடாது எனவும் எந்த ஒரு நிறுவனம் சம்மந்தபட்ட பகுதியில் உள்ள வருவாய் துறை மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று கிளைகள் தொடங்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளன.
1லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 36,000 ரூபாய் வட்டியாகவும் தொடர்ந்து 12 மாதம் வழங்கபடுவதாகவும் அதனையடுத்து டெபாசிட் செய்த பணத்தை கொண்ட ஆவணம் புதுப்பித்து தரப்படும் என்று கவர்ச்சிகரமான திட்டமாக பொதுமக்களுக்கு ஆரூத்ரா நிறுவனம் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த ஆரூத்ரா கோல்டு கம்பெனி தற்போது சென்னை அமைந்தகரை தலையிடமாக கொண்டு விளங்கும் கோல்டு கம்பெனி. வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆவடி, ராணிப்பேட்டை, வேலூர், செய்யார், பெருங்களத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் கிளைகள் உள்ளதாக தெரிகின்றன.
இதனையடுத்து கடந்த 6-ம் தேதி ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள தனியார் லாட்ஜ் வளாகத்தில் புதிய கிளையாக திறக்கபட்டுள்ளன. திறந்த ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்கள் சுமார் 125 க்கும் மேற்பட்டோர் தங்களின் பணத்தை டெபாசிட் செய்துள்ளதாக தெரிகின்றன.
Also read... மதுரை ரயில் நிலைய வளாகத்திற்கு வரும் சைக்கிள்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூல் - பொதுமக்கள் அதிருப்தி
இதுகுறித்து சமூக வளைதலங்களில், சதுரங்க வேட்டை படம் பாணியில் பணம் பறிக்க வேண்டுமென்றால் ஆசையை தூண்ட வேண்டும் என்ற பாணியில் திறக்கபட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆரணி வருவாய் துறை தாசில்தார் பெருமாள், ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் உள்ளிட்ட போலீசார் ஆரூத்ரா கோல்டு கம்பெனி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நிருவனத்தினரிடம் அரசின் அனுமதி பெற்றுள்ளீர்களா? ஆரணி பகுதியில் புதிய கிளை திறப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி வழங்கபட்டுள்ளன என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க 1 நாள் கால அவகாசம் வருவாய் துறையினர் ஆரூத்ரா கோல்டு கம்பெனிக்கு அளித்துள்ளனர்.
-செய்தியாளர்: மோகன்ராஜ். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.