முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / தங்கமூக்குத்தி.. வட்டியில்லா கடன்.. - ஆசைவார்த்தை கூறி கோடிகளை சுருட்டிய சீட்டு கம்பெனி

தங்கமூக்குத்தி.. வட்டியில்லா கடன்.. - ஆசைவார்த்தை கூறி கோடிகளை சுருட்டிய சீட்டு கம்பெனி

பாதிக்கப்பட்டவர்கள்

பாதிக்கப்பட்டவர்கள்

Tiruvannamalai | உறுப்பினர்களிடம் பல ஆண்டுகளாக ரூ.20 கோடி அளவிற்கு பணத்தை பெற்று கொண்டு தற்போது தலைமறைவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai | Tamil Nadu

திருவண்ணாமலையில் பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏராளமானோர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியினை தலைமை இடமாகக் கொண்டு ஸ்டார் பவுண்டேஷன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக ஜெயராமன் மற்றும் இளவரசி ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்த நிறுவனத்தில் ஸ்டார் மகளிர் திட்டம், ஸ்டார் பவுண்டேஷன், ஸ்டார் வேளாண்மை குழு என்ற பெயர்களிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது.

நாளடைவில் இந்த தனியார் நிறுவனம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர் என தொண்டு நிறுவனங்களில் உள்ள மகளிர்களை குறி வைத்து உலகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளை ஆரம்பித்தது.

  • இந்த நிறுவனம், ஸ்டார் மகளிர் திட்டத்தில் ரூ. 50 கொடுத்து உறுப்பினராக சேர்ந்தால் அவர்களுக்கு ஒரு புடவை ஒரு தங்க மூக்குத்தி வழங்கப்படும் என்றும், ஸ்டார் பவுண்டேஷன் திட்டத்தில் மாதம் ரூ.300 கட்டினால் அவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்றும், கார் வேளாண்மை குழுவில் உறுப்பினர்களாக சேருபவர்கள் தலா ரூ. 1600 கட்டினால் அவர்களுக்கு தமிழக அரசு வழங்குவதைப் போல 4 ஆடு அல்லது ஒரு பசு மாடு வழங்கப்படும் என்றும் ரூ.10,000 கட்டும் உறுப்பினருக்கு ஒரு லட்சம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி பலரையும் உறுப்பினர்களாக சேர்ந்து பல ஆண்டுகளாக ரூ. 20 கோடி அளவிற்கு பணத்தை பெற்று கொண்டு தற்போது தலைமறைவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் 10,000-க்கும் மேற்பட்டோரிடம் ஸ்டார் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதரவற்ற வறுமையில் வாழும் கிராமப்பெண்களுக்கு தையல் பயிற்சி, கணினி பயிற்சி, அழகுக்கலைப்பயிற்சிக்கென தலா ரூபாய் 1600 வீதம் பணம் வசூல் செய்துள்ளனர். ஆனால் பயிற்சி முடித்தும் பல மாதங்களாகியும் இதுவரை பயிற்சிக்கான சான்றிதழையும் வழங்கவில்லை, அதற்கான உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ALSO READ | ஆப்பிள் ஐபோன் பிரியர்களுக்கு நற்செய்தி - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள படித்த ஏழை மாணவ மாணவர்கள் பெண்கள் பயனடைந்து வாழ்வில் வளம் பெறுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் ஒருங்கிணைப்பாளர்களும் ஒவ்வொருவரிடமும் பணம் பெற்று ஸ்டார் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தில் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் பணம் கட்டி பல மாதங்களாகியதால் அந்தந்த மாவட்ட பொதுமக்களும் ஒருங்கிணைப்பாளர்களை பணம் கேட்டு பிரச்சனை செய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு தனித்தனியே வக்கீல் நோட்டீஸ் வந்திருந்தது. அதில், ஸ்டார் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி ஒருங்கிணைப்பாளர்கள் பணம் வசூல் செய்து ஏமாற்றி விட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்டார் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தை முற்றுகையிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை உடைத்து எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ஸ்டார் பவுண்டேஷன் நிர்வாகிகளான இளவரசி மற்றும் ஜெயராமன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். கோடி கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதால் போலீசார் தலைமறைவாகியுள்ள இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Cheated, Cheating case, Fraud