Home /News /tiruvannamalai /

பழமைவாய்ந்த கோவிலின் கோபுரத்தில் இருந்த 9 கலசங்கள் திருட்டு; ஆரணியில் பரபரப்பு

பழமைவாய்ந்த கோவிலின் கோபுரத்தில் இருந்த 9 கலசங்கள் திருட்டு; ஆரணியில் பரபரப்பு

ஆரணி கோவில்

ஆரணி கோவில்

Tiruvannamalai | ஆரணி அருகே பழமைவாய்ந்த கோவிலின் கோபுரத்தில் உள்ள 9 கலசங்கள் திருட்டப்பட்டுள்ளன. இது சிலை கடத்தல் கும்பலின் வேலையா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அழகுசேனை கிராமத்தில் உள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ தர்மராஜா கோவில். இந்த கோவிலில் நேற்று இரவு மர்மநபர்கள் கோபுரத்தில் இருந்த 3 கலசங்கள் கொடிமரத்தின் அருகே இருந்த 3 கலசங்கள் நாகதேவதையம்மன் கோவிலில் இருந்த 3 கலசங்கள் உள்ளிட்ட 9 கலசங்களை திருடி சென்றுள்ளனர்.

    மேலும் வழக்கம் போல் இன்று காலையில் பொதுமக்கள் கோவிலை பார்த்த போது 9 கலசங்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் கோவில் உண்டியல் உடைக்காமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கோவில் நிர்வாக குழு சார்பில் கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் கோவில் கலசம் திருட்டு போன சம்பவம் குறித்து புகார் அளிக்கபட்டன.

    அந்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பழமைவாய்ந்த அந்த ஆலயத்தில் உள்ள கலசங்களை திருடிய மர்ம நபர்களை சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்களா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகின்றனர்.

    Also see... நிலுவை தொகையை செலுத்தி தமிழகத்தில் மின்தடை ஏற்படாமல் தடுங்கள் - ராமதாஸ் வேண்டுகோள்

    இந்நிலையில் ஆரணி அருகே பழமைவாய்ந்த ஆலயத்தில் 9 கலசம் திருடுபோன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arani, Crime News, Hindu Temple, Idols theft, Thiruvannamalai

    அடுத்த செய்தி