Home /News /tiruvannamalai /

செங்கம்: இறந்தவர்களை புதைக்க மயானம் இல்லாததால் தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய ஊராட்சிமன்ற துணைத்தலைவர்

செங்கம்: இறந்தவர்களை புதைக்க மயானம் இல்லாததால் தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய ஊராட்சிமன்ற துணைத்தலைவர்

வட்டாட்சியர் முனுசாமியிடம் தானமாக வழங்கும் நிலத்தின் பத்திரத்தை கொடுத்தார் ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவர்

வட்டாட்சியர் முனுசாமியிடம் தானமாக வழங்கும் நிலத்தின் பத்திரத்தை கொடுத்தார் ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவர்

Tiruvannamalai | செங்கம் அருகே இறந்தவர்களை புதைக்க மயானம் இல்லாததால் தனது சொந்த நிலத்தை மயானத்திற்காக கொடுத்தார் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொரசப்பட்டு ஊராட்சியை சேர்ந்த PL.தண்டா பகுதியில் லம்பாடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்காக தனியாக மயானம் இல்லாததால் இறந்தவர்களை புதைப்பதற்கு வெகு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்த நிலையில் பொரசப்பட்டு ஊராட்சி மன்ற  துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா சிவா தன்னை நம்பி வாக்களித்த ஊராட்சிக்கு தன்னால் முடிந்த உதவியாக லம்பாடி இன மக்களுக்கு மயானம் அமைத்துக் கொடுக்க முடிவு செய்தார்.

    அதனால் தனது பயன்பாட்டிற்காக வாங்கிய 30 சென்ட் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்து அதன் பேரில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தன் பெயரில் உள்ள 30 சென்ட் நிலத்தை தானமாக கொடுத்த  பத்திரத்தை வட்டாட்சியர் முனுசாமி அவர்களிடம் வழங்கினார்.

    Also see... முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ்

    துணைத் தலைவர் மற்றும் அவரது கணவர் செய்த இந்த உதவிக்கு லம்பாடி இன மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வு செங்கம் பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chengam, Thiruvannamalai

    அடுத்த செய்தி