Home /News /tiruvannamalai /

சொத்தை ஏமாற்றிய பேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரியதிலும் நடவடிக்கை இல்லாததால் கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு

சொத்தை ஏமாற்றிய பேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரியதிலும் நடவடிக்கை இல்லாததால் கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு

கருணை கொலை செய்ய கேட்கும் மூதாட்டி

கருணை கொலை செய்ய கேட்கும் மூதாட்டி

புற்று நோயால் அவதிபட்டு வரும் நிலையில் தன்னுடைய சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிய பேரனிடமிருந்து சொத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினாலும் தன்னை கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    ஆரணியில் புற்று நோயால் கண் பார்வை இழந்து தவிக்கும் மூதாட்டியின் சொத்தை ஏமாற்றி அபகரித்த பேரன் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மூதாட்டியை கருணை கொலை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்த சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் சின்னகுழந்தை (95) மூதாட்டி. இவருக்கு நடராஜன், ராஜேந்திரன், குமரேசன் ஆகிய 3மகன்கள் உள்ளனர். இதில் குமரேசன் நடராஜன் ஆகிய 2 மகன்கள் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகன் ராஜேந்திரன் அரவணைப்பில் மூதாட்டி சின்னகுழந்தை வசித்து வருகின்றார்.ஷ

    மேலும் கடந்த 2021ம் ஆண்டு இறந்த நடராஜன் என்பவரின் மகனும் மூதாட்டி சின்னகுழந்தை பேரன் கார்த்தி என்பவர் மூதாட்டிக்கு புற்று நோயால் 2 கண்பார்வை இழந்துள்ளதை பயன்படுத்தி மூதாட்டி பெயரில் உள்ள வீட்டின் சொத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கி அதனை ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளார்.

    மேலும் படிக்க : சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    இதனை அறிந்த மூதாட்டி மகன் ராஜேந்திரன் மற்றும் மூதாட்டி சின்னகுழந்தை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமியிடம் பல முறை மனு அளித்தும் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுமட்டுமின்றி தற்போது ராஜேந்தின் என்பவருக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் மூதாட்டி சின்னகுழந்தைக்கு வரும் முதியோர் உதவிதொகை வைத்து பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

    மேலும் புற்று நோயால் அவதிபட்டு வரும் நிலையில் தன்னுடைய சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிய பேரனிடமிருந்து சொத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினாலும் தன்னை கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கை மனுஅளித்துள்ளார்.

    ஆரணியில் புற்றுநோயால் கண்பார்வை இழந்த மூதாட்டியிடம் சொத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்த சம்பவம் அங்கிருந்த மக்கள் நெஞ்சை உறைய வைத்தது..
    Published by:Raj Kumar
    First published:

    Tags: District collectors, Mercy Killing, Thiruvannamalai

    அடுத்த செய்தி