ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

மனைவி, 3 மகள், 1 மகனை வெட்டிக் கொன்று இளைஞர் தற்கொலை.. செங்கம் அருகே பயங்கரம்.!

மனைவி, 3 மகள், 1 மகனை வெட்டிக் கொன்று இளைஞர் தற்கொலை.. செங்கம் அருகே பயங்கரம்.!

கதறி அழும் ஊர் மக்கள்

கதறி அழும் ஊர் மக்கள்

மற்றொரு மகள் பூமிகா (9) உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

குடும்ப தகராறு காரணமாக 40 வயது நபர் ஒருவர் தனது 4 வயது மகன் உட்பட குடும்பத்தினர் 5 பேரை வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் ஒரவந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (40).

இவர் நேற்று நள்ளிரவு தனது மனைவி வள்ளி (37), மகள்கள் திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), மகன் தனுஷ் (4) ஆகிய 5 பேரை வெட்டி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதில் மற்றொரு மகள் பூமிகா (9) உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு என தெரியவந்துள்ளது.

First published:

Tags: Child murdered, Crime News, Murder, Tiruvannamalai