ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

காதலியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்துகொள்ள மறுத்தவர் கைது!

காதலியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்துகொள்ள மறுத்தவர் கைது!

மாதிரி படம்

மாதிரி படம்

ஏழுமலைக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் இளம்பெண், ஏழுமலையை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே காதலியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்துகொள்ளமுடியாது என கூறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30). இவர் 23 வயதாகிய இளம் பட்டதாரி பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில், ஏழுமலைக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் இளம்பெண், ஏழுமலையை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஏழுமலை உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். மேலும் ஏழுமலையின் உறவினர்களும் அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

  இதையும் படிக்க : ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்.. கரும்பு காட்டில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!

  அப்படி திருமணம் செய்ய வேண்டும் என்றால் நகை, பணம் எடுத்து வந்தால்தான் திருமணம் செய்ய முடியும் என்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் ஏழுமலையின் உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Crime News, Man arrested, Thiruvannamalai