ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை தன் கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும் - ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேச்சு!

20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை தன் கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும் - ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேச்சு!

ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு

ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு

இதனை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் அறிவித்தனர். மேலும் அவர்கள், மாவட்ட ஆட்சியருக்கு, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை வழங்கினார்கள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  பாஜக தலைவர் 20,000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறுகிறார், அவர் தன் கட்சி தோழர்களையும் புத்தகங்கள் படிக்க வைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேசியுள்ளார்.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ‘மாதம் ஓரு எழுத்தாளர்’ நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சந்துரு நிகழ்ச்சியில் பேசிய போது, “தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்றவுடன் சால்வைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனால் லட்சக்கணக்கான புத்தங்கள், துணை நூலகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

  புதுக்கோட்டைக்கு வருகை புரிந்த முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ‘அறியாதப்படாத கிருஸ்துவம்’ என்ற நூலை வழங்கினார். அப்போது இதனை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் அறிவித்தனர். மேலும் அவர்கள், மாவட்ட ஆட்சியருக்கு, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை வழங்கினார்கள்.

  இதையும் வாசிக்க: ‘தொடர் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் பாஜகவினர் மீது சந்தேகம் உள்ளது’ – திருமாவளவன்

  அக்கட்சியின் தலைவர் ஒருமுறை தான் 20,000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறினார். அதேபோல் தன் கட்சியின் தோழர்களை அவர் படிக்க வைக்க வேண்டும். ஏனென்றால் புத்தகங்களை படித்தால் பாசிச கொள்கையை போக்கலாம்” என பேசினார்.

  இதனையடுத்து நீதியரசர் சந்துரு, தான் எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலை அறிமுகம் செய்து வாசகர்களுக்கு வழங்கினார்.

  செய்தியாளர்: ம.மோகன்ராஜ்- ஆரணி

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Annamalai, BJP cadre, Book release, Judge