Home /News /tiruvannamalai /

திருவண்ணாமலை : கஞ்சா போதையில் கிரிவலப் பாதையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த லாரி ஓட்டுனரால் பரபரப்பு

திருவண்ணாமலை : கஞ்சா போதையில் கிரிவலப் பாதையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த லாரி ஓட்டுனரால் பரபரப்பு

கிரிவலப் பாதையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த லாரி ஓட்டுனர்

கிரிவலப் பாதையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த லாரி ஓட்டுனர்

Tiruvannamalai | மது மற்றும் கஞ்சா போதையில் கிரிவலப் பாதையில் நிர்வாணமாக லாரி ஓட்டுனர் சுற்றித்திரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் டிரைவர் மணிகண்டன். இவர் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியிலிருந்து லாரி முழுவதும் பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்று ஓசூரில் டெலிவரி செய்வதற்காக புறப்பட்டார்.

இன்று அதிகாலை திருவண்ணாமலை வந்தடைந்த அவர் மது குடித்துள்ளார். அத்துடன் கஞ்சாவும் புகைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் போதை தலைக்கு ஏறிய அவர் செய்வதறியாமல் கிரிவலப் பாதையில் அரை நிர்வாணமாக சுற்றித்திரிந்தார். அப்போது கிரிவலப் பாதையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் கிரிவலம் சென்ற பக்தர்கள் என அனைவரும் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அங்குள்ள மக்கள் அவரை பிடிக்க முற்படுகையில் திடீரென அவர் தனது அனைத்து ஆடைகளையும் கழற்றி விட்டு முழு நிர்வாணமாக சுற்றி தீர்ந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மது மற்றும் கஞ்சா போதையில் நிர்வாணமாக கிரிவலப் பாதையை சுற்றித்திரிந்த டிரைவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see... புதுச்சேரியில் 9000 ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை புலாசா மீன்...

கிரிவலப் பாதையில் காலை நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் நிர்வாணமாக இளைஞர் சுற்றி திரிந்தது கிரிவலம் பக்தர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cannabis, Crime News, Thiruvannamalai

அடுத்த செய்தி