ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

முண்டியடித்த கூட்டம்.. திருவண்ணாமலையில் கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள்.. பௌர்ணமி கிரிவல தரிசனம்!

முண்டியடித்த கூட்டம்.. திருவண்ணாமலையில் கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள்.. பௌர்ணமி கிரிவல தரிசனம்!

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்

நேற்று மாலை முதல் இன்று மாலை வரை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai | Tiruvannamalai | Tamil Nadu

  திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

  நினைத்தாலே முக்தி தரக்கூடிய  திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

  அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

  14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

  இதையும் படிங்க | சந்திர கிரகணம் 2022 : திருப்பதி முதல் மீனாட்சி அம்மன் கோயில் வரை.. நடை சாத்தப்படும் கோயில்கள்!

  இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

  நேற்று மாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றி அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக 14 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் கிரிவல பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Tiruvannamalai