ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

நெருங்கும் கார்த்திகை தீபம்.. களைகட்டும் திருவண்ணாமலையில் காவல்தெய்வ உற்சவம்..!

நெருங்கும் கார்த்திகை தீபம்.. களைகட்டும் திருவண்ணாமலையில் காவல்தெய்வ உற்சவம்..!

திருவண்ணாமலை பிடாரி அம்மன் உற்சவம்

திருவண்ணாமலை பிடாரி அம்மன் உற்சவம்

Tiruvannamalai karthigai deepam | வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் நெருங்குவதையொட்டி கோயிலின் காவல் தெய்வமான பிடாரி அம்மன் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தீபத் திருவிழாவையொட்டி கோயிலின் 3 ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் பிடாரி அம்மன் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் பிடாரி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் கோயில் ஊழியர்களால் தோளில் சுமந்தவாறு மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிடாரியம்மன் மூலவர் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

இதையும் படிங்க | 1000 தூண்கள் கொண்ட அண்ணாமலையார் திருக்கோவில் 1000 கால் மண்டபம் - பக்தர்கள் பயன்பாட்டுக்கு இன்று திறப்பு

அதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் ஊர்வலமாக வந்த பிடாரியம்மன், ராஜகோபுரம் அருகே 16 கால் மண்டபத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பிடாரி அம்மன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை வழிநெடுக திரண்ட ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Festival, Karthigai Deepam, Local News, Tiruvannamalai