பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வரும் 6ம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணம் என்றும், மாலை 6 மணிக்கு மகாதீபத்தை தரிசிக்க 500 மற்றும் 600 என இரண்டு வகை கட்டணங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிக்கெட்களை annamalaiyar.hrce.tn.gov.in என்ற கோயில் இணையதள முகவரியில் நாளை காலை 10 மணி முதல் பதிவு செய்யலாம் என்றும், ஆன்லைன் டிக்கெட் பெற ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Also see... திருப்பதி: ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எத்தனை கோடிகள் தெரியுமா?
மேலும் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை 1800 425 3657 என்ற எண்ணிலும் அறிந்து கொள்ளலாம் என்றும், ஆன்லைன் மூலம் நன்கொடை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட
சிறப்பு ரயில்கள்
இதனிடையே, தீபத் திருவிழாவையொட்டி வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அத்துடன் வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதே நாட்களில் புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். 6 மற்றும் 7ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை இடையே 4 சிறப்பு ரயில்களும் இதேபோன்று 6 மற்றும் 7ம் தேதிகளில் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 4 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
Also see... தீப திருவிழா : சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
அதேபோல தாம்பரம் மற்றும் திருவண்ணாமலை இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள ஆட்சியர், இதனை அனைத்து பக்தர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam, Tiruvannamalai