ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருக்கார்த்திகை தீபத் திருவிழா 6 ஆம் நாள்... பள்ளி மாணவர்கள் சுமந்துசென்ற 63 நாயன்மார்கள் மாட வீதி உலா...

திருக்கார்த்திகை தீபத் திருவிழா 6 ஆம் நாள்... பள்ளி மாணவர்கள் சுமந்துசென்ற 63 நாயன்மார்கள் மாட வீதி உலா...

63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

Karthigai Deepam 2022 | திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ஆம் நாள் விழாவில் 63 நாயன்மார்கள் மாட வீதி உலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக நினைத்தாலே முக்தி தரும் திருத் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தீபத் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று காலை 63நாயன்மார்களின் மாட வீதி உலா பவனி நடைபெற்றது. திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சிவ தொண்டர்கள் என ஏராளமானவர்கள் 63 நாயன்மார்கள் பல்லக்கை சுமந்து மாடவீதியில் வலம் வந்தனர்.

முன்னதாக விநாயகர், சந்திர சேகரர், 63 நாயன்மார்கள் ஆகியோர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிவபெருமானுக்குத் தொண்டு செய்த அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர் உள்ளிட்ட 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில் 59வது ஆண்டாக தொடர்ந்து மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

Also see... திருவண்ணாமலை தீபத்திருவிழா : நாளை ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடக்கம்!

இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு 63 நாயன்மார்களை தோள்களில் சுமந்து மாடவீதியில் வலம் வந்தனர்.

இதனைத்தொடர்ந்து சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் மாடவீதியில் பவனி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai