ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2022... காவல் உதவி மையம் திறப்பு.!

திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2022... காவல் உதவி மையம் திறப்பு.!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

karthigai deepam 2022 : திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நகரின் பாதுகாப்பு குறித்தும் கண்காணிப்பு கேமராக்களை தமிழக காவல்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ராஜகோபுரம் எதிரில் காவல்துறை சார்பில் மே ஐ ஹெல்ப் யு (May i help you) என்ற காவலர் உதவும் மையத்தை பெண் காவலரை ரிப்பன் வெட்ட வைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செல்லக்கூடிய இலவச தரிசன பாதை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தவர். மேலும் மாடவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் விதம் குற்றவாளிகளை கண்டறியும் செயலி பொதுமக்களின் பாதுகாப்பு அனைத்தையும் முறையாக கையாள வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பான்கள், கோயில் அருகே உள்ள நகர காவல் நிலையத்தையும் ஆய்வு செய்தார்.

Also see... திருவண்ணாமலை மகா தீபம்..மலை ஏறுவதற்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிப்பு

அப்பொழுது நகர காவல் நிலையத்தை சுத்தமாக பராமரித்து வந்ததும் காவல் நிலைய கோப்புகளை முறையாக பராமரித்து வந்த நகர காவல் நிலைய எழுத்தர் சுகுமாருக்கு 5000 ரூபாய் வழங்கி கௌரவித்தார்.

மேலும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமரா பழுதடைந்தால் உடனடியாக மாற்றி கண்காணிக்க வேண்டுமென காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக அதிகாலை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai