ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

கிணற்றில் சடலமாக மிதந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - ஆரணியில் பகீர் சம்பவம்

கிணற்றில் சடலமாக மிதந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - ஆரணியில் பகீர் சம்பவம்

ராஜேஸ்வரி - உதயசூரியன்

ராஜேஸ்வரி - உதயசூரியன்

Crime News : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் ஆரணியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai | Arani (Arni)

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கடுக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமிகாந்த் - ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற லட்சுமிகாந்த வீடு திரும்பவில்லை. டிசம்பர் 24-ம் தேதி அந்தப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் லட்சுமிகாந்த் சடலமாக மிதந்தார். இச்சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் பெரணமல்லூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் லட்சுமிகாந்த் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராஜேஸ்வரியிடம் போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஸ்வரி செய்யாறு பகுதியில் உள்ள சிப்காட்டில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அங்கு வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் பணி முடிந்து வீட்டுக்கு வந்த பின்னரும் ராஜேஸ்வரி செல்போனில் நீண்டநேரம் உதயசூரியனுடன் பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் தெரியவந்ததையடுத்து லட்சுமிகாந்த் தனது மனைவி இராஜேஸ்வரியை அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். இதனை ராஜேஸ்வரி தனது கள்ளக்காதலன் உதயசூரியனிடம் கூறினார். கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்கும் லட்சுமிகாந்தை தீர்த்து கட்டிவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் உதயசூரியன் மற்றும் வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் பாண்டியன் (வயது 23) இருவரும் கடந்த 23-ம் தேதி லட்சுமிகாந்தை செல்போன் மூலம் அழைத்துள்ளனர். இதனையடுத்து மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் உதயசூரியன் மற்றும் பாண்டியன் இருவரும் சேர்ந்து லட்சுமிகாந்தை கழுத்தை நெறித்து படுகொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து லட்சுமிகாந்த் உடலை கக்னூர் கிராமத்தில் உள்ள விநாயகம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உடலை வீசி சென்றுள்ளனர். அதன்பின்னர் ராஜேஸ்வரி, உதயசூரியன், பாண்டியன் மூவரும் தலைமறைவாகியுள்ளனர். மறுநாள் காலையில் கிணற்றில் சடலம் மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் தலைமறைவான மூவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில் பெரணமல்லூர் பேருந்து நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர்.கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரணமல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: மோகன்ராஜ் (ஆரணி)

First published:

Tags: Crime News, Illegal affair, Illegal relationship, Local News, Murder, Tamil News, Tiruvannamalai