Home /News /tiruvannamalai /

மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு

மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு

தண்டராம்பட்டு அருகே பெண் கொலை - கணவர் பரபரப்பு வாக்குமூலம்
 ( கொலை செய்யப்பட்ட மனைவி)

தண்டராம்பட்டு அருகே பெண் கொலை - கணவர் பரபரப்பு வாக்குமூலம் ( கொலை செய்யப்பட்ட மனைவி)

Tiruvannamalai | மகளின் காதல் திருமணத்தில் கலந்துகொள்ளாமல் சகோதரி வீட்டு விஷேசத்தில் கலந்துகொள்ள முயன்ற மனைவியை அவரது கணவரே கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். அவரை தானிப்பாடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India
  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த  ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி(48). இவரது மனைவி ராணி(43). இவர்களுக்கு ராஜபாண்டி(24), சிவா(22) என்ற 2 மகன்கள், பரணி (21) என்ற மகள் உள்ளார். ராணி வெளிநாட்டில் தங்கி வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பழனியின் தாய் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இதனால் இறுதிச் சடங்கிற்கு சொந்த கிராமத்துக்கு வந்த ராணி இங்கேயே தங்கி விட்டார்.

  இந்த நிலையில் இவர்களது மகள் பரணி புதுரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த வாலிபருக்கு நேற்று முன்தினம் பழனி மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் அதே கிராமத்தில் திருமணம் நடந்தது. ஆனால் மகள் காதல் திருமணம் செய்து கொள்வது தாய் ராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

  இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் ராணியின் அக்கா வசித்து வருகிறார். அவரது வீட்டில் நடைபெற உள்ள விசேஷத்திற்கு தேவையான பொருட்களை தானிப்பாடியில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் ராணி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினார். இதைக்கண்ட பழனி மகள் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் உனது அக்கா வீட்டு விசேஷத்திற்கு மட்டும் செல்கிறாயா? எனக் கேட்டுள்ளார்.

  இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரமாக இருவரிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பழனி, வீட்டில் இருந்த கத்தியால் ராணியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராணி பரிதாபமாக இறந்துவிட்டார். உடனே பழனி அங்கிருந்து ஓடிவிட்டார்.

  இந்நிலையில் வெளியே சென்றிருந்த ராணியின் மகன் சிவா வீட்டுக்கு வந்த போது,கட்டில் மீது தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில் ரூரல் டிஎஸ்பி அஸ்வினி, தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தானிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Also see... சடலத்துடன் குரூப் போட்டோ ஷூட் நடத்திய குடும்பம்

  பின்னர் வழக்குப்பதிவு செய்து மாயமான பழனியை தேடி வந்தனர். நேற்று அதிகாலை பக்கத்து கிராமத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த பழனியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகள் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத மனைவியை கணவர் வெட்டி கொலை செய்தாரா?அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என போலீசார் கைது செய்யப்பட்ட பழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Husband Wife, Murder case, Thiruvannamalai

  அடுத்த செய்தி