Home /News /tiruvannamalai /

4 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது... திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்

4 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது... திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தும் போலீசார்

பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தும் போலீசார்

Arani | திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 4 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் பாலத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Arani (Arni), India
    திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகே சேத்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மகள் வீட்டின் அருகே உள்ள ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகின்றார். இந்த பள்ளியை சேத்பட் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மனைவி பிரபாவதி என்பவர் நடத்தி வருகிறார்.

    மேலும் காமராஜ் என்பவர் சேத்பட் அருகே உலகபட்டு கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். தனது மனைவி பிரபாவதி நடத்தும் சாந்தா வித்யாலயா பள்ளிக்கு அடிக்கடி காமராஜ் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் 4 வயது பெண் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கபட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை மேற்கொண்டனர். இதில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது சிகிச்சையில் தெரியவந்தது.இதனால் பெற்றோர்  அதிர்ச்சியடைந்தனர். மேலும்

    இதனையொடுத்து 4வயது சிறுமியிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ஸ்ரீ சாந்தா வித்யாலயா பள்ளி தலைமையாசிரியை பிரபாவதி கணவர் காமராஜ் என்பவர் 4 வயது குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து குழந்தையை  பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

    Also see...மனைவி கண் முன்னே கழுத்தை அறுத்துக் கொண்ட கணவன்

    பின்னர் இச்சம்பவம் குறித்து போளுர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பிரபாவதி சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் தலைமறைவான அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் என்பவரை திருச்செந்தூர் பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arani, Child Abuse, Crime News, Govt teachers, Rape

    அடுத்த செய்தி