திருவண்ணாமலையில் கிரிவலத்தின் போது அன்னதானத்திற்காக நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 101 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இடங்களில் 226 பேர் அன்னதானம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறியுள்ளார். மேலும் அன்னதானம் செய்பவர்கள் அவர்களே தங்கள் குப்பைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் முருகேஷ்,” 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் பாதையில் இந்த ஆண்டு கூடுதலாக பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்னதானத்திற்காக நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 101 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களில் 226 பேர் அன்னதானம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் அன்னதானம் செய்பவர்கள் அவர்களே தங்கள் குப்பைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பரணி தீபத்திற்காக ஆன்லைன் மூலம் 500 டிக்கெட்டுகளும் மகாதீபத்திற்காக 1200 டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட உள்ளது என்றும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், டிசம்பர் 3-ம் தேதி மாட வீதியில் வலம் வர உள்ள மகாராஜா தினத்தன்று 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் டிசம்பர் 6ஆம் தேதி தீப தினத்தன்று தமிழகம் முழுவதிலிருந்து 11000 த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.
Also see... திருப்பதி தரிசன நேரத்தில் மாற்றம்... டிசம்பர் முதல் அமலாகும் புதிய விதி!
மேலும், திருவண்ணாமலை நகரத்திற்குள் உள்ளே வர ஒன்பது சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்காக அந்த இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், மாடவீதி, நகரப்பகுதி புறவழிச்சாலை மாவட்ட எல்லை என அனைத்து பகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் இதில் 15 குழுவினர் வாகன தணிக்கை பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் பயணிகளின் உடைமைகளை சரி செய்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் கூறினார்.
Also see... வாக்கிங் சென்றபோது மயக்கம்.. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு!
அத்துடன் திருவண்ணாமலை நகரத்திற்குள் ஆன்லைன் மூலம் 12000 கார் பார்க்கிங் செய்ய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிசம்பர் 6ஆம் தேதி பரணி தீபம் முடிந்த பிறகு காலை 7 மணி முதல் 10 மணி வரை தேவைக்கு ஏற்ப பொது தரிசனத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.