முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / "விஜய்யை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்" தந்தை சந்திரசேகர் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!

"விஜய்யை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்" தந்தை சந்திரசேகர் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!

எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர்

S.A.Chandrasekar pressmeet | திருவண்ணாமலைக்கு சென்ற இயக்குனர் சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய்யை பற்றி அவரிடம் கேளுங்கள் என கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai, India

நடிகர் விஜய் எதிர்காலம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள், விஜய்யிடம் கேளுங்கள் என இயக்குனரும் நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு, நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வந்திருந்தார்.

இந்த தகவல், ஆரணி முழுவதும் பரவியதால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். அப்போது சாமி கும்பிட்டுவிட்டு வெளியேவந்த எஸ்.ஏ.சியிடம், நடிகர் விஜய்யின் எதிர்காலம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ நடிகர் விஜய் எதிர்காலம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் விஜயிடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.

இது அங்கு குவிந்திருந்த விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்க்கும், எஸ்.ஏ.சி-க்கும் சில காலமாக பிரச்சனை இருந்துவருவதாக கூறப்படும் நிலையில், பல செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்யை கடுமையாக சாடியிருந்தார் சந்திரசேகர்.

செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Director S.A.Chandrasekar, Local News, Tiruvannamalai