Home /News /tiruvannamalai /

ஆரணியில் சைவ உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டில் எலி தலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்...

ஆரணியில் சைவ உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டில் எலி தலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்...

உணவில் எலி தலை - ஆரணி

உணவில் எலி தலை - ஆரணி

Arani | ஆரணியில் சைவ உணவகம் ஒன்றில் துக்க நிகழ்வுக்கு வாங்கிச் சென்ற சாப்பாட்டில் எலி தலை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடந்தார்.இது குறித்து ஹோட்டலுக்கு சென்று முறையிட்டதால் ஹோட்டல் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Arani (Arni), India
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்ரீ பாலாஜிபவன் என்கின்ற உணவகம் இயங்கி வருகிறது. இந்த சைவ உணவகத்தில் நேற்று ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முரளி என்பவரின் துக்க நிகழ்வுக்காக 35 சைவ சாப்பாடு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஆர்டரின் பெயரில் நேற்று மதியம் பாலாஜி பவன் ஓட்டலில் இருந்து சாப்பாடு முரளி என்பவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அப்போது முரளியின் வீட்டில் துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்டு உள்ளனர்.
    பின்னர் அதில் இருந்த பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததாக முரளி வீட்டார் தெரிவித்தனர்.

    முரளி மற்றும் அவரது உறவினர்கள் எலி தலையுடன் பாலாஜி பவன் ஹோட்டலுக்கு சென்று இது தொடர்பாக முறையிட்டனர். இதற்கு ஹோட்டல் ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு உணவை அனுப்பி வைத்தோம். 6 மணிநேரத்திற்குப் பிறகு உணவில் எலி தலை இருப்பதாக கூறுவது முறையல்ல என்று தெரிவித்ததால் ஹோட்டல் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் இரு தரப்பினர் இடையே சமரசம் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பரிசோதனை செய்ய உணவை எடுத்து சென்று விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட முரளி பாலாஜி ஹோட்டல் மீது ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    Also see... எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து... சாதூர்யமாக செல்பட்ட கார் டிரைவர்

    சைவ உணவகத்தில் எலி தலை இருந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: மோகன்ராஜ், ஆரணி 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Food, Hotel, Thiruvannamalai

    அடுத்த செய்தி