Home /News /tiruvannamalai /

வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் - வைரலாகும் பரபரப்பு வீடியோ

வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் - வைரலாகும் பரபரப்பு வீடியோ

மாணவர்களுக்கு இடையே மோதல்

மாணவர்களுக்கு இடையே மோதல்

Thiruvannamalai : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் உள்ள தனியார் கல்லூரில் மாணவர்களுக்கிடையே மோதலில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    வந்தவாசி அடுத்த தெள்ளாரில், ராஜா நந்திவர்மன்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த தனியார் கல்லூரியில் நேற்று மூன்றாம் ஆண்டு படித்து முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆண்டு விழா நடத்தினர். இந்நிலையில் வணிகவியல் துறை மாணவர்களுக்கும் வேதியல் துறை மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், பின்னர் ஒருவருக்கொருவர் தாக்கி மிகக் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    https://youtu.be/WkNKat5bY3s

    அவ்வாறு தாக்கிக் கொண்ட போது, சக மாணவர்கள் தங்களது மொபைல் போனில் இதை படம் பிடித்துள்ளனர். இந்த சண்டைக் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Must Read : ஒட்டுமொத்த நாட்டின் முன் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்சநீதிமன்றம் விளாசல்

    இதனை அடுத்து கல்லூரி ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து கல்லூரி நிர்வாகம், விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Attack, College student, Thiruvannamalai, Vandavasi

    அடுத்த செய்தி