செய்யாறு அருகே தரை பாலம் முற்றிலும் மூழ்கியதால் பொதுமக்கள் கயிறைப் பிடித்துக் கொண்டு கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அளத்துறை கிராமத்தில் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கியதால் பொதுமக்கள் கயிறைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டது. 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செய்யாறு அடுத்த அலத்துறை கிராமத்தில் இருந்து பையூர், சௌந்தரிபுரம் மேல்தர்மா பின்னத்தூர்,எலப்பாக்கம், துறையூர், கல்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் இந்த சாலையின் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. தற்போது மாண்டஸ் புயல் காரணமாக கன மழை பெய்தது.
இந்த நிலையில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி நிரம்பி கலங்கள் வழியாக உபரி நீர் வெளியே செல்லும்போது இந்த தரைப்பாலம் முழுவதும் முழுகி உள்ள நிலையில் கிராம பொதுமக்கள் கயிற்றைப் பிடித்துக் கொண்டு உயிரை பணயம் வைத்து கயிறு மூலமாக தரை பாலத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் செய்யாறு உத்திரமேரூர் போன்ற பெரிய நகரத்திற்கு அவசர வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் சூழ்நிலை தற்போது இருந்து வருகிறது.
மேலும் குழந்தைகளும் பெரியவர்களும் கயிற்றின் மூலமாக தற்போது இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று கொண்டிருக்கின்றன. மேலும் இந்த தரப்பாலத்தின் வழியாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கயிற்றின் வழியாக செல்லும்போது பல உயிர் சேதம் ஏற்படும் அபாயத்தில் இருந்து வரும் நிலையில் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் ம.மோகன்ராஜ், ஆரணி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheyyaru, Cyclone Mandous, Heavy rain