ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

நல்ல காலம் பொறக்குதுனு சொல்லும் பூம் பூம்பூ மாட்டுக்காரர்களின் சோகமான வாழ்க்கை

நல்ல காலம் பொறக்குதுனு சொல்லும் பூம் பூம்பூ மாட்டுக்காரர்களின் சோகமான வாழ்க்கை

பூம் பூம்பூ மாட்டுக்காரர்

பூம் பூம்பூ மாட்டுக்காரர்

நிலையாக ஒரு இடத்தில் வசிப்பவர்கள் இல்லை என்பதால் இவர்களுக்கு அரசு சலுகைகளை பெறுவதற்கான ஆவணங்களும் பெற முடியாமல் உள்ளார்கள் இவர்களின் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Arani (Arni), India

  தமிழகத்தில் வாழும் பூம்பூம் மாட்டுக்காரர்களின் பிள்ளைகளின் கல்வி அறிவு வேலை வாய்ப்பு இல்லாமல் பாரம்பரிய தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.இதனால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ஊருக்கு நல்ல காலம் பொறக்குது என்று சொல்லும் இவர்களுக்கு நல்ல காலம் பிறப்பது எப்போது..

  பூம் பூம்பூ மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி....

  டும் டும் மேளம் கொட்டி சேதி சொன்னாண்டி.....

  என்ற திரை இசை பாடல்கள் கேட்டிடாத 80 kids 90 kids ஆட்களே கிடையாது.

  பொதுமக்கள் அவர்களை பேச்சு வழக்கில் குடு உடுப்பைக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர், பெருமாள் மாட்டுக்காரர் போன்ற பல பெயர்களில் குறிப்பிடுவார்கள். இவர்கள் தங்களின் சமுதாய முகாம் மூத்தவரின் கட்டுப்பாட்டுக்கிணங்க திருமணம் உள்ளிட்ட சம்பிரதாயங்களை இன்றளவும் செய்து வருகின்றனர்.வரதட்சணை வாங்கும் பழக்க வழக்கம் இவர்களின் வம்சத்துக்கே கிடையாது என்பது பாராட்டுக்குரியது.

  மேலும் இவர்கள் மராட்டியத்தில் இருந்தும் கன்னடத்தில் இருந்தும் தமிழகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது தங்களின் தாய் மொழியைப் பெரும்பாலும் மறந்த நிலையில் தமிழ் மொழியை பேசக்கூடியவர்களாக காலப்போக்கில் மாறிவிட்டார்கள் இவர்கள். எனினும் இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  19569 உள்ளதாக உள்ளதாக ஆய்வு மூலம் அறியப்படுவதில் அதில் இவர்களின் மொழியும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

  பெரும்பாலும்  சாலை ஓரங்கள் கிராமப்புற மந்தவெளி, மலையடிவாரம், ஆறு போன்ற நீர்நிலைகளை ஒட்டியே இவர்கள் முகாம் அமைந்திக்கும். ஏனெனில் இவர்களுக்கும், இவர்களின் மாட்டிற்கும் தேவையான உணவுப் பொருட்கள் மேற்கண்ட இடங்களில் தான் மிக எளிதில் கிடைக்கக் கூடியவையாக என்பதால்.

  மரபு ரீதியாக இச்சமுதாய மக்கள் நேர்த்தி கடனாக  பெருமாள் கடவுளுக்கு அளிக்கக்கூடிய எருது மாடுகளை உரிய வழிபாடு நடத்தி சிறு தட்சணையுடன் பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் அதிசயதக்க வகையில் இருக்கும், அதாவது கொண்டையில் ஐந்தாவது சிறு கால் முளைத்த கடவுளே கூட இருப்பது போல் எருதுகளையும் பாதுகாக்கிறார்கள்.

  பூம் பூம் மாடு

  விடியற்காலை நேரத்தில் அவர்கள் தெய்வமாக வணங்கக்கூடிய ஜக்கம்மாவை வணங்கி வீடு வீடாக ஜக்கம்மாவின் அருள்வாக்கை குடுகுடுப்பை ஓசையுடன் கூறுகிறார்கள். அது பலிப்பதாகவும் அதன்படி சம்பவங்கள் நடப்பதாகவும் இன்றளவு கிராமப் புறங்களில் மக்களிடையே நம்பிக்கை தக்க ஒரு கதையாக உள்ளது. பொழுது விடிந்ததும் பெருமாள் மாட்டை நன்கு ஆடை அலங்காரம் செய்து நாணயம் ஊதிக் கொண்டு அதே ஊரில் மீண்டும் வீடு வீடாக செல்கின்றனர்.

  அதே சமயம் பெருமாள் மாடு தலையில் கட்டப்பட்டுள்ள உண்டியல் தொகையை செலுத்துபவர்களுக்கு அந்தக் காளை மாடு தலையை அசைத்து ஆசீர்வதிக்கிறது. மக்கள் தானமாக வழங்கும் பழைய துணி தானியங்கள் உணவு மாட்டிற்கான உணவாக வைக்கோல் தவிடு பொட்டு புண்ணாக்கு மற்றும் தீவனங்களை பெற்றுக் கொள்கின்றார்கள்.

  இதையும் படிங்க: தேவர் குருபூஜை - தங்க கவசத்தை பெறப்போவது யார் ? ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையே போட்டி

  இந்த பூம்பூம் மாட்டை கண்டவுடன் சிறுவர்கள் துள்ளி குதித்து ஆர்வத்துடன் வீடு வீடாக உடன் சென்று கண்டு மகிழ்வார்கள்.இது போன்ற யாசகம் செய்து தங்களையும் தங்களுக்கு துணை புரியும் மாட்டையும் காத்துக் கொள்கின்றனர். குறிப்பாக இத்தொழில் புரட்டாசி முதல் தை மாதம் வரை தான் இவர்களுக்கு கை கொடுக்கிறது. காரணம் என்னவென்றால் புரட்டாசி மாதத்தில் வெங்கடாசலபதி பெருமாளையும் தை மாதத்தில் மாட்டை தெய்வமாக வணங்கக்கூடிய உழவர் திருநாள் கொண்டாடும் வரை இவர்கள் தொழில் கலைக்கட்டும்.

  குழந்தைகளும் இந்த தொழிலில் ஈடுபடும் நிலை

  இதனால் இவர்கள் வேறு தொழில் தெரியாததால் பெரும் கஷ்டத்திற்கிடையே உயிர் வாழ்கிறார்கள்.  நிலையாக ஒரு இடத்தில் வசிப்பவர்கள் இல்லை என்பதால் இவர்களுக்கு அரசு சலுகைகளை பெறுவதற்கான ஆவணங்களும் பெற முடியாமல் உள்ளார்கள். இதனால் இவர்களின் இளைய தலைமுறை கல்வி அறிவு வேலை வாய்ப்பு இல்லாமல் பாரம்பரிய தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர் என்பது வேதனைக் குரியதாகும்.

  எங்களுடைய கஷ்டங்களை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை என்று சோகத்துடன் கூறுகிறார்கள் இவர்கள், ஊருக்கு நல்ல காலம் பொறக்குது என்று சொல்லும் இவர்கள் தங்களுக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும் என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். இவர்கள் தான் இந்த தொழிலை நம்பி வாழ்ந்தாலும் இவரது குழந்தைகளின் கல்விக்கு உதவி கரம் நீட்டுமா தமிழக அரசு என்ற எதிர்பார்த்து காத்திருக்கினற்னர்.

  ஆரணி செய்தியாளர் : ம.மோகன்ராஜ்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Arani, Thiruvannamalai