ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

பரதநாட்டியம் ஆடியபடி 14 கி.மீ. கிரிவலம் வந்த கலைஞர்கள்.. திருவண்ணாமலையில் கின்னஸ் முயற்சி!

பரதநாட்டியம் ஆடியபடி 14 கி.மீ. கிரிவலம் வந்த கலைஞர்கள்.. திருவண்ணாமலையில் கின்னஸ் முயற்சி!

நடனமாடிய படி கிரிவலம் சென்ற கலைஞர்கள்

நடனமாடிய படி கிரிவலம் சென்ற கலைஞர்கள்

Tiruvannamalai girivalam | பரதநாட்டியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai

திருவண்ணாமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்த பரதநாட்டிய கலைஞர்களை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம் மாதம் உள்ள பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் 14 கி.மீ. கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசிப்பர்.

அந்த வகையில், இன்று தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பவானாலயா இன்ஸ்டிட்யூட் ஆஃப் நடன பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் பரதநாட்டிய கலைஞர்கள், திருவண்ணாமலையில்  14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பரதநாட்டியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிவலம் சென்றனர்.

இதையும் படிங்க | அத்தியாவசிய பொருட்களை வாங்க கிராமமே ஒன்று திரண்டு செல்கிறது - என்ன காரணம்?

உலக சாதனை முயற்சிக்காக பல்வேறு முத்திரைகளை பயன்படுத்தி நடனமாடிய படியே கிரிவலம் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிவப்பு நிறத்திலான உடையில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஒரே கையசைவில், அழகாக நடனமாடியபடி நடந்து சென்ற காட்சிகள் பலரையும் கவர்ந்தது.

Published by:Anupriyam K
First published:

Tags: Tiruvannamalai