முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / அடுத்தடுத்து உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள்.. லட்சக்கணக்கில் பணம் கொள்ளை.. திருவண்ணாமலையில் பரபரப்பு..!

அடுத்தடுத்து உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள்.. லட்சக்கணக்கில் பணம் கொள்ளை.. திருவண்ணாமலையில் பரபரப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

திருவண்ணாமலை, போளூர் ஏடிஎம் மையங்களுக்குள் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை  நகரில் மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது.  அங்கு சமீபத்தில்தான்   வங்கியில் இருந்து பணம் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.  இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்குள் திடீரென புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்தனர்.

அதிலிருந்து 33 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து கொண்டு இயந்திரத்தையும் தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதேபோல போளூர் ரயில் நிலையம் பகுதியில் இயங்கி வந்த ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு உள்ளே புகுந்த மர்ம கும்பல் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடித்துக் கொண்டு பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை கொளுத்தி விட்டு தப்பியுள்ளனர். அதேசமயம் கலசப்பாக்கம் பகுதியில்  உள்ள ஏடிஎம் மையத்தின் உள்ளே புகுந்த மர்மகும்பல் வெல்டிங் இயந்திரம் மூலம் கொள்ளையடித்துக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை கொளுத்தி விட்டு தப்பியுள்ளனர்.

ஒரே நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்கள் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

First published:

Tags: ATM, Theft, Tiruvannamalai