முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / ஆரணியில் போலீசாரை இழிவாக பேசியதாக விசிகவினர் மீது புகார்... 50 பேர் மீது வழக்கு... குற்றவாளிகளை தேடும் 7 தனிப்படை!

ஆரணியில் போலீசாரை இழிவாக பேசியதாக விசிகவினர் மீது புகார்... 50 பேர் மீது வழக்கு... குற்றவாளிகளை தேடும் 7 தனிப்படை!

பினையில் வெளி வந்த விசிக மாவட்டசெயலாளர் பாஸ்கரன் ஊர்வலமாக சென்றார்

பினையில் வெளி வந்த விசிக மாவட்டசெயலாளர் பாஸ்கரன் ஊர்வலமாக சென்றார்

Arani VCK Protest | ஆரணி நகர காவல் நிலையம் முன்பு வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல்துறையினருக்கு எதிராக கொச்சைப்படுத்தும் வகையில் கோஷமிட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Arani (Arni), India

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காவல்துறையினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசி கோஷமிட்டது தொடர்பாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை, ஒருமையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விடுதலைசிறுத்தை கட்சி மாவட்டசெயலாளர் பாஸ்கரன் பிணையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து ஆரணி வந்த அவரை மாங்காமரம் பகுதியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது ஆரணி நகர காவல் நிலையம் முன்பு வந்த அவர்கள் காவல்துறையினருக்கு எதிராக கொச்சைப்படுத்தும் வகையில் கோஷமிட்டனர்.

இதனை செல்போனில் படம்பிடித்த காவலர்களையும் அநாகரீக வார்த்தைகளால் சாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் உட்பட 50 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ள மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆரணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Crime News, Local News, Thiruvannamalai, VCK