ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருவண்ணாமலை : பவுர்ணமி கிரிவலத்தில் தரிசனம் தந்த அண்ணாமலையார்: வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம்..!

திருவண்ணாமலை : பவுர்ணமி கிரிவலத்தில் தரிசனம் தந்த அண்ணாமலையார்: வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம்..!

அண்ணாமலையார் கிரிவலம்

அண்ணாமலையார் கிரிவலம்

Tiruvannamalai | கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் வகையில் அண்ணாமலையர், உண்ணாமலையம்மன் மற்றும் துர்கையம்மன் விக்கிரகங்கள் கிரிவலம் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

கிரிவலத்தின் மகிமையை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக அண்ணாமலையாரும் உண்ணாமலையம்மனும் கிரிவலம் சென்றனர்.  அப்போது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். 

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கடந்த நவம்பர் 27 ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இது முக்கிய விழாவான பரணி தீபம் டிசம்பர் 6 ம் தேதி அதிகாலை கோயிலினுள் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப  மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. மலையையே சிவனாகவும், சிவனையே மலையாகவும் கருதும் திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலத்தை பௌர்ணமி, தீபம் உள்ளிட்ட பல்வேறு நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.

குறிப்பாக அண்ணாமலையார் கிரிவலத்தின் மகிமையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் கார்த்திகை தீபம் நிறைவு பெற்று இரண்டாம் நாளும், அதேபோல் பொங்கல் திருவிழாவின் போது திருவூடல் முடித்து சிவனடியார் பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளிக்கவும், ஆண்டிற்கு இரண்டு முறை அண்ணாமலையார் கிரிவலம் வருவது வழக்கம்.

Also see... திருப்பதியில் கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி..!

அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்அலங்காரம் செய்யப்பட்டு கோயில் ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

கிரிவலம் சென்ற அண்ணாமலையார்

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனது குடும்பத்துடன், கிரிவலத்தின் மகத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அப்பொழுது பக்தர்கள் வழிநெடுகிலும், சாமிக்கு மாலை அணிவித்து, ஆடைகள் வழங்கி, தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai