திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த 17 வயது மாணவி ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் ஆரணி பகுதியை சேர்ந்த தனியார் ஐடிஐ மாணவர் சக்திவேல் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சக்திவேல் தனது இன்ஸ்டாகிராமில் வித்தியாசமாக வீடியோவை பதிவு செய்து வந்துள்ளார். இதனையடுத்து மாணவி அவரை ஃபாலோ செய்து வந்தார். இருவரும் இன்ஸ்டாவில் பேசி பழகி காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு வீட்டினருக்கும் தெரியவந்துள்ளது. படிக்கும் வயதில் காதல் எதற்கு என பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இருவரும் வீட்டை விட்டு வழக்கம் போல் வெளியே சென்றுள்ளனர்.
காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்வதாக முடிவெடுத்துள்ளனர். ஆரணி அருகே வடமாதிமங்கலம் ரயில்வே ஸ்டேசன் அருகாமையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் நேற்று இரவு சுமார் 8.00 மணிக்கு திருப்பதியிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அதிவிரைவு ரயில் முன்புபாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் இளம் காதல் ஜோடியின் உடல் உபகரணங்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறி கிடந்தன.
இதையும் படிங்க : கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்.. 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய இளைஞர்
இச்சம்பம் குறித்து தகவலறிந்த வந்த காட்பாடி ரயில்வே போலீசார் ரயிலில் பாய்ந்து சின்னபின்னமான காதல் ஜோடி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர்அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு பதிந்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆரணி அருகே இன்ஸ்ட்ரம்காமில் மலர்ந்த பள்ளி இளம் காதல் ஜோடி ரயில் முன்புபாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
செய்தியாளர்: ம.மோகன்ராஜ் (ஆரணி)
-----------------------------------------------------------------------------------------------
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
-----------------------------------------------------------------------------------------------
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Crime News, Lovers, Thiruvannamalai