Home /News /tiruvannamalai /

கையில் சூலம்.. தலையில் கிரீடம்.. அம்மன் அவதாரத்தில் அன்னபூரணி - பக்தி பரவசத்தில் பக்தர்கள்

கையில் சூலம்.. தலையில் கிரீடம்.. அம்மன் அவதாரத்தில் அன்னபூரணி - பக்தி பரவசத்தில் பக்தர்கள்

அண்ணப்பூரணி

அண்ணப்பூரணி

Annapoorani : அன்னபூரணி அம்மா சூலம், கிரீடம் அணிந்து அம்மன் வேடத்தில்  பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கீழ்பென்னாத்தூரில் ஆடி மாதம் முன்னிட்டு  அன்னபூரணி அரசு  அம்மா அம்மன் வேடத்தில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்.

    உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் கடந்தாண்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மூலம் லைம் லைட்டுக்கு வந்தவர்தான் அன்னபூரணி. ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறும் அன்னபூரணிக்கு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் செய்யும் பூஜை வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆடி மாசம் அம்மனுக்கே உரிய மாதம் என்பதால் பக்தர்களுக்கு அம்மன் வேடத்தில் காட்சியளித்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் அமைத்துள்ள அன்னபூரணி அரசு பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு வழங்கி  வருகிறார்.  தன்னை  ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இதைதொடர்ந்து யூடியூப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆடி மாதத்தை முன்னிட்டு நேற்று அன்னபூரணி அரசு அம்மாவின் பக்தர்கள் அம்மன் வேடத்தில் பார்க்க வேண்டும்  என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இதனையடுத்து அன்னபூரணி அம்மா சூலம், கிரீடம் அணிந்து அம்மன் வேடத்தில்  பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    செய்தியாளர்: சதீஷ் ( திருவண்ணாமலை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Annapoorani, Tamil News, Tiruvannamalai

    அடுத்த செய்தி