Home /News /tiruvannamalai /

மனைவி இறந்த சோகத்தில் வளர்ப்பு நாயுடன் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை.. ஆரணியில் சோகம்

மனைவி இறந்த சோகத்தில் வளர்ப்பு நாயுடன் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை.. ஆரணியில் சோகம்

ஆரணியில் தான் வளர்த்த நாயுடன் வாலிபர் தற்கொலை

ஆரணியில் தான் வளர்த்த நாயுடன் வாலிபர் தற்கொலை

Arani | ஆரணியில் தான் வளர்த்த செல்ல பிராணி நாயுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அழுகிய நிலையில் சடலத்தை கைப்பற்றி ஆரணி நகர போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதிய கடிதம் சிக்கியது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Arani, India
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சின்னசாயக்கார தெருவில் பாஸ்கரன் என்பவரின் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சேலம் பகுதியை சேர்ந்த ரகு என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். குடியிருந்த வீட்டிலேயே தனது தொழிலான டெய்லர் வேலையை செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் பாஸ்கரன் நேற்று வழக்கம் போல் மாதரந்திர வாடகை வசூலிக்க வீட்டிற்கு வந்துள்ளார்.
    பலமுறை அழைத்தும் எந்த பதிலும் இல்லாத காரணத்தினால் சந்தேகமடைந்த பாஸ்கரன் இச்சம்பவம் குறித்து ஆரணி நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் ஆரணி நகர போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது ரகு தான் வளர்த்த நாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    Also see... நில மோசடி வழக்கு: ஜெயக்குமார் மனு மீது செப்.13ல் உத்தரவு 

    இறந்து சில நாட்கள் ஆனதால் அழுகிய நிலையில் உள்ள ரகு சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், ரகு எழுதிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில், மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து  போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arani, Commit suicide, Crime News

    அடுத்த செய்தி