ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் புழு... அதிர்ச்சி அடைந்த மதுபிரியர் கடையை முற்றுகையிட்டு போராட்டம்!

டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் புழு... அதிர்ச்சி அடைந்த மதுபிரியர் கடையை முற்றுகையிட்டு போராட்டம்!

டாஸ்மாக்

டாஸ்மாக்

டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மது பிரியர் நியாயம் கேட்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக மது விற்பனை பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 9249 என்ற டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மது பிரியர் ஒருவர்  135 ரூபாய் கொடுத்து மது பாட்டிலை வாங்கியுள்ளார். அந்தப்பட்டிலில் இறந்த நிலையில் புழு ஒன்று மிதந்துள்ளது. அதை பார்த்த அதிர்ச்சி அடைந்து அவர் டாஸ்மாக் ஊழியரிடம் நியாயம் கேட்டு தனது நண்பர்களுடன் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுள்ளார். இதனால் நேற்று அந்த டாஸ்மாக் கடையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மது பாட்டில் விற்பனை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மது பிரியர்களும் மது பாட்டில்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் மது பாட்டிலில் இருந்த புழு குறித்து  டாஸ்மாக் கடை ஊழியரிடம் நியாயம் கேட்டபோது, இது எனது பொறுப்பு அல்ல என்றும்,  அந்த மதுபான நிறுவனம்தான் பொறுப்பு என்றும் அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இதனால் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களுக்கும் மதுப்பிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மது பிரியருடன் வந்திருந்த மற்றொரு நபர் டாஸ்மாக் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த டேபிளில் அமர்ந்து மது பாட்டிலை கையில் ஏந்தி இதை குடித்துவிட்டு நான் இறந்து விட்டால் என் குடும்பத்திற்கு யார் பதில் கூறுவார்கள் என்று ஆவேசமுடன் பேசினார். இதனால் மது பாட்டில் வாங்க வந்த நபர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

Also see... சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க அனுமதி..

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று மது பாட்டிலில் புழு இருந்த சம்பவம் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Tasmac, Thiruvannamalai