Home /News /tiruvannamalai /

பார்சல் உணவில் எலி தலை.. ஆரணி ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடல்

பார்சல் உணவில் எலி தலை.. ஆரணி ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடல்

பார்சல் உணவில் எலி தலை

பார்சல் உணவில் எலி தலை

ஆரணியில் சைவ ஓட்டல் உணவு பார்சலில் எலி தலை இருந்த சம்பவத்தில் ஹோட்டல் உரிமத்தை ரத்து செய்து அரசின் மறு உத்தரவு வரும் வரை ஹோட்டலை திறக்க கூடாது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்ரீபாலாஜி பவன் என்கின்ற உணவகம் இயங்கி வருகிறது.  மேலும் இந்த சைவஉணவகத்தில் நேற்று முன்தினம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தகூலித்தொழிலாளி முரளி என்பவர் பார்சல் சாப்பாடு வாங்கி சென்றுள்ளார். ஆனால் இந்த உணவில் கொடுத்த பொரியலில் எலி தலை உள்ளதாக கூறி சுமார்25க்கும் மேற்பட்டோர் சைவ உணவகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    உணவு பொரியலில் எலி தலை உள்ள சம்பவத்தின் எதிரொலியாக மாவட்டஉணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள்சம்மந்தபட்ட உணவகத்தை ஆய்வு மேற்கொண்டனர். இதனையொடுத்து இன்று ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள 5 கோடிமதிப்பீட்டில் கட்டபட்ட வரும் இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதியைஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தியாளர்களிடம், :உணவு பொரியலில் எலி தலை உள்ள சம்பவத்தில் முதல்கட்டமாக மனு 35அளிக்கபட்டுள்ளன. இதனையொடுத்து எலி தலை உள்ள உணவகத்தை சீல் வைக்கபடும் என்று தெரிவித்திருந்தார்.

    ALSO READ |  தஞ்சாவூரில் நாட்டு மீன்கள் உற்பத்தியை அதிகரிக்க ஆட்சியர் நடவடிக்கை

    இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் உரிமத்தை ரத்து செய்து அரசின் மறு உத்தரவு வரும் வரை ஹோட்டலை திறக்க கூடாது என்று ஓட்டலை மூடி நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Tiruvanamalai

    அடுத்த செய்தி