Home /News /tiruvannamalai /

கொடுத்தப் பணத்தை வாங்கச் சென்ற வாலிபர் தலையை துண்டித்து எரித்த கும்பல்- 3 பேர் கைது- திருவண்ணாமலையில் கொடூரம்

கொடுத்தப் பணத்தை வாங்கச் சென்ற வாலிபர் தலையை துண்டித்து எரித்த கும்பல்- 3 பேர் கைது- திருவண்ணாமலையில் கொடூரம்

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொடுத்த பணத்தை வாங்க சென்ற வாலிபர், தலை துண்டித்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் ஏழுமலை. இவரது மகன் விஜய். அவருக்கு வயது 21. இவர் தன்னுடைய தந்தை கடையில் பணியாற்றி பைனான்ஸ் தொழிலும் செய்து வகின்றார்.

மேலும் இரவு நேரத்தில் மளிகை கடையை மூடி விட்டு விஜய்தான் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். ஆனால் கடந்த 12ம் தேதியன்று வீடு திரும்பவில்லை. இதனால் மறுநாள் காலையில் அக்கம் பக்கம் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. விஜய் செல்போனுக்கு போன் செய்தால் சுவிட்ஸ் ஆப் என வந்ததால் சந்தேடைந்த ஏழுமலை, மகன் காணாமல் போனது குறித்து தெள்ளார் காவல்நிலையத்தில் புகார்அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இறுதியாக செல்போன் டவர் சிக்னல் வைத்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்ட போது அந்த இடத்தில் திடுக்கிடும் சம்பவம் நடந்தேறியது தெரியவந்தது.

தலையின்றி முண்டமாக எரிந்த நிலையில் வாலிபரின் சடலம் கண்டெடுக்கபட்டது. வாலிபரின் டீ-சர்ட், பைக் உள்ளிட்டவைகளை கொண்டு எரிந்த நிலையில் சடலமாக இருப்பது விஜய்தான் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

மேலும் டி.எஸ்.பி விஸ்வேஸ்வரய்யா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு செல்போன் டவர் சிக்னல் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்த விஜய்யிடம் நல்லூர்கிராமத்தை சேர்ந்த மொய்தீன் என்பவர் இறுதியாக பேசியது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் மொய்தீனிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை செய்ததில் மொய்தீன், விஜய் என்பவரிடம் 1 லட்ச ரூபாய் கடனாக பெற்றதாகவும் கடனை திருப்பிகேட்டு தொந்தரவு செய்ததால் அதே கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான நாரணயசாமி( 32 ), வரதன் (40) ஆகியோர் உதவியுடன் விஜய் கொலை செய்ய முடிவெடுத்து சு.நாவல்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகன் கோவில் அருகே உள்ள காட்டு பகுதிக்கு வரவழைத்துள்னர்.

தெருவில் நிறுத்தி வைத்த டூவிலருடன் சேர்ந்து போடப்பட்ட சிமெண்ட் சாலை.. தூங்கி எழுந்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்..

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜய்யை உடம்பில் பலஇடங்களில் வெட்டினார்கள். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த விஜய்யின் தலையை கொடூரமான முறையில் துண்டுடித்துள்ளதாகவும் இதன் பின்னர் யாருக்கும் தெரிய கூடாது என்று பைக்கில் இருந்த பெட்ரோலை கொண்டு விஜய்யின் சடலத்தைஎரித்தனர்.

பின்னர் அங்கே இருந்து தப்பியோடி விட்டதாகவும் விசாரணையில் மொய்தீன் ஓப்பு கொண்டுள்ளார். பின்னர் தலைமறைவான நாரயணன், வரதன் ஆகிய 2 பேரை தனிப்படைபோலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி.
Published by:Karthick S
First published:

Tags: Crime News, Thiruvannamalai

அடுத்த செய்தி