ஆரணி அருகே மாண்டஸ் புயலால் 50,000 வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் படவேடு, புஷ்பகிரி, வெல்லூர் சின்ன புஷ்பகிரி ஆகிய பகுதிகளில் வாழை விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. மேலும் இந்த வாழை விவசாயம் 12 மாதம் பயிரிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதில் மஞ்சள், செவ்வாழை, கற்பூர வாழை உள்ளிட்ட வாழை வகைகள் பயிப்படுகின்றன. இந்த வாழை பொருட்களை திருமணம் நிகழ்ச்சி, சுப விஷயங்கள் மற்றும் ஓட்டல் உள்ளிட்டவைகளுக்கு சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி 1 ஏக்கருக்கு 50 ஆயிரம் வரையில் செலவினம் செலவு செய்யப்பட உள்ளதால் வங்கியில் கடன் மற்றும் நகை அடமானம் வைத்தும் விவசாயம் செய்கின்றனர்.
இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு அதிவேகமாக புயல் காற்று வீசியதில் 500 ஏக்கரில் வாழை நடப்பட்டுள்ள சுமார் 50,000வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள வாழை விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
செய்தியாளர் : மோகன்ராஜ் - ஆரணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Mandous, Local News, Tiruvannamalai, Weather News in Tamil