ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருவண்ணாமலையை அதிரவைத்த டெய்லர்கொலை வழக்கு : தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது!

திருவண்ணாமலையை அதிரவைத்த டெய்லர்கொலை வழக்கு : தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது!

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

Tiruvannamalai Murder Case | கடந்த 7-ந் தேதி இரவு சுமார் 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த டெய்லர் ஆறுமுகத்தை ஹெல்மேட் அணி வந்த கும்பல் வெட்டி கொன்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் டெய்லர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை நல்லவன்பாளையம் அடுத்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த டெய்லர் ஆறுமுகம் ( 54) என்பவர் கடந்த 7-ந் தேதி இரவு சுமார் 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து நல்லவன்பாளையம் நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் தாமரை நகர் அருகில், ஆறுமுகத்தை வழிமறித்து திடீரென வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்  பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (40) என்பவர் கூலிப்படையை ஏவி ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பரந்தாமனையும், கூலிப்படையை சேர்ந்த கலசப்பாக்கம் தாலுகா சாலையனூரை சேர்ந்த பாரதி (22), திருவண்ணாமலை கரையான் செட்டி தெருவை சேர்ந்த தமிழரசன் (20), திருவண்ணாமலை குளத்து மேட்டு தெரு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் கொலை சம்பவத்தில் கொலை செய்ய திட்டம் தீட்டியது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து வெட்டியது, காரில் பாதுகாப்பாக பின்னால் வந்தது என கூலிப்படையினர் 8 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.  இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 பேரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்த திருவண்ணாமலை சாரோனை சேர்ந்த இசக்கியல் (29), விநாயகமூர்த்தி (22), மோசஸ் (22), எடப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மணிகண்டன் (32), கோபிநாத் (23) ஆகிய 5 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும்  கொலை சம்பவத்தின்போது அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Thiruvannamalai