Home /News /tiruvannamalai /

4 பெண்கள் கூட்டணி அமைத்து காவல்துறையின் பெயரில் கோடிக்கணக்கில் பலே மோசடி..

4 பெண்கள் கூட்டணி அமைத்து காவல்துறையின் பெயரில் கோடிக்கணக்கில் பலே மோசடி..

திருவண்ணாமலை எஸ்பி எலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

திருவண்ணாமலை எஸ்பி எலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

Tiruvannamalai | தமிழ்நாடு அரசு காவல்துறையின் போலி கடித நகலை காண்பித்து கிராம மக்களிடம் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை கூட்டணி அமைத்து கடனாக பெற்று 5 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றி வந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமி, லதா, சசிகலா மற்றும் அமிர்தம். இவர்கள் 4 பேரும் கூட்டணி அமைத்து மங்கலம், ஆனந்தல், வேடந்தவாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்டோரிடம், தங்களுக்கு வங்கியிலிருந்து 40 கோடிக்கு மேல் பணம் வரவேண்டியுள்ளதாக கூறியும், தரும் பணம் மற்றும் நகைக்கு இரட்டிப்பு பணம் மற்றும் இரட்டிப்பு நகைகள் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

    அத்துடன், இதற்கு உத்தரவாதமாக தமிழக காவல் துறையின் தலைவர் எழுதியதாக கடிதத்தை காண்பித்து கிராம மக்களிடம் கோடிக் கணக்கில் பணமும், தங்க நகைகளையும் கடனாக பெற்றுள்ளனர். ஆண்டுகள் பல கழிந்தும் பணமும், நகையும் வராததால் பொதுமக்கள் பல முறை முறையிட்டதையடுத்து எழுதப்படாத பத்திரமும், பணத்திற்காக பல்வேறு வங்கிகளின் காசோலைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினர் அந்த 4 பெண்கள். குறிப்பிட்ட கால இடைவெளி வரையிலும் அசல் பணம் மற்றும் நகையையும் கொடுக்காமல் ஏமாற்றியும் மிரட்டியும் வந்துள்ளனர்.

    குறிப்பாக காவல் நிலையம் சென்றால் பணம் வந்தவுடன் காவல் நிலையம் சென்றவர்களுக்கு நிச்சயம் பணம் மற்றும் நகைகளை கொடுக்க மாட்டோம் என்று அந்த 4 பெண்களும் கூறி மிரட்டியுள்ளனர். அதனால் செய்வதறியாத கிராமமக்கள் புகார் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.  6 ஆண்டுகள் ஆனதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட கிராமமக்கள் கண்ணீர் மல்க  புகார் மனு அளித்தனர்.



    இதனையடுத்து 4 பெண்களையும்   மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து 3 மணிநேரத்திற்கு மேலாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  4 பெண்கள் கூட்டணி அமைத்து ஆசை வார்த்தைகள் கூறி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், உடனடியாக அவர்களிடமிருந்து தங்கள் பணம் மற்றும் நகைகளை மீட்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏமாற்றப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



    Also see... போலி தங்க நகைகளை வைத்து ரூ.40 லட்சம் மோசடி.. கோவையில் தனியார் நிறுவன பெண் நிர்வாகி கைது...

    தமிழக அரசின் லோகோவுடன் கூடிய காவல்துறை உயர் அதிகாரியின் கையெழுத்து என நம்பி பணம் கொடுத்து தற்போது கிராமமக்கள் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cheating case, Crime News, Thiruvannamalai

    அடுத்த செய்தி